News March 20, 2024

நாங்குநேரி காங்கிரஸ் எம்எல்ஏ எதிர்ப்பு!

image

திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி கட்சி சார்பில் காங்கிரஸ் கட்சி போட்டியிட உள்ளது. இந்தநிலையில் நாளை (மார்ச் 21) தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியாக உள்ள நிலையில் நெல்லை தொகுதியில் சிறுபான்மையினர் நல வாரிய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் வேட்பாளராக போட்டியிடுவதற்கு நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் இன்று (மார்ச் 19) எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

Similar News

News April 19, 2025

இன்ஸ்டாவில் பிரச்சனை ஏற்படும் விதமாக பதிவிட்ட 4 பேர் கைது

image

மானூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட எட்டான்குளம், தெற்கு தெருவை சேர்ந்த கோகுல்(24), முத்து(20), சுடலைமுத்து(18), அந்தோணி ராஜ் (23) ஆகிய 4 பேரும் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் இரு தரப்பினருக்கு இடையே பிரச்சனையை தூண்டும் வகையில் வீடியோ மற்றும் சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் புகைப்படத்தை பதிவு செய்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் இன்று 4 பேரை கைது செய்தனர்.

News April 19, 2025

21 நாட்கள் கோடைகால பயிற்சி முகாம்

image

தமிழகவிளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 21 நாட்கள் கோடைகால பயிற்சி முகாம் வரும் 23ஆம் தேதி அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெறும். இந்த முகாமில் தடகளம், கூடைப்பந்து, கைப்பந்து, வளைகோல் பந்து ஜிம்னாஸ்டிக் குத்துச்சண்டை ஆகியவை, 18 வயதிற்கு உட்பட்ட மாணவ மாணவிகளுக்கு சிறந்த அரசு பயிற்றுநர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் சேர்வதற்கு அண்ணா விளையாட்டு அரங்கில் பதிவு செய்ய வேண்டும்.

News April 19, 2025

ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் உயிரிழப்பு

image

நாசரேத் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் கென்னடி (48 ). இவர் தனது ஆட்டோவை சர்வீஸ் செய்வதற்காக உவரி நவ்வலடி சாலை மேல்நிலைப்பள்ளி அருகே சென்ற போது வேகத்தடையில் ஆட்டோ இறங்கியதில் ஆட்டோ கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு  அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!