News May 10, 2024

நாகை 22ஆவது இடம்!

image

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே.10) வெளியாகியுள்ளது. அதன்படி நாகை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 87.95% ஆக பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 84.54 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 91.07 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். அரசு பள்ளிகளில் தேர்ச்சி அடிப்படையில் நாகை மாவட்டம் 22ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

Similar News

News November 20, 2024

நாகை ஏடிஎஸ்பி, டிஎஸ்பி இடமாற்றம்

image

நாகப்பட்டினம் கூடுதல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த எஸ்.செல்வகுமார் சென்னை ஊனமஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அகாடமிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதைப்போல், நாகப்பட்டினம் துணை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் கடலூர் மாவட்டம் விருதாச்சலம் துணை கண்காணிப்பாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என காவல்துறை தலைவர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

News November 20, 2024

நாகை மாவட்டத்தில் கனமழை வாய்ப்பு

image

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழக டெல்டா மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக தொடர் கனமழை மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நாகை மாவட்டத்தில் வரும் நவ.26 ஆம் தேதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்கிறதா? கமெண்டில் தெரிவிக்கவும். SHARE NOW!

News November 20, 2024

நாகை:  மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு 

image

நாகையில் கனமழை பெய்து வருவதை தொடர்ந்து விடுமுறை குறித்து அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் முடிவெடுத்துக்கொள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷிணி அறிவித்துள்ளார். ஆட்சியரின் அறிவுரையை தொடர்ந்து மாவட்ட கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். வருகையை கட்டாயப்படுத்தக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.