News March 19, 2024
நாகை வேட்பாளர் வரலாறு

நாகப்பட்டினம் தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக வை. செல்வராஜ் அறிவிக்கப்பட்டுள்ளார். மன்னார்குடி ஒன்றியம் சவளக்காரன் ஊராட்சி கீழநாலாநல்லூர் கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்த இவர், மன்னார்குடி அரசுக்கலைக் கல்லூரியில் பி.ஏ, பூண்டி புஷ்பம் கல்லூரியில் (எம்.ஏ,எம்.பில்) முதுகலை கல்வி ஆராய்ச்சி பட்டம் பெற்றுள்ளார்.தற்போது நாகப்பட்டினம் மாவட்ட செயலாளராக உள்ளார்.
Similar News
News April 5, 2025
நாகை: மனக்கவலைகளை தீர்க்கும் மனத்துணைநாதர்

நாகப்பட்டினம், வலிவலம் பகுதியில் அருள்மிகு மனத்துணைநாதர் கோவில் உள்ளது. இங்கு சென்று மூலவரான மனத்துணைநாதரை வழிபட்டால் பெயருக்கு ஏற்றார் போலவே நம் வாழ்வில் உள்ள சகல மனக்கவலைகளும், மனதில் ஏற்பட்டு இருக்கும் தேவையற்ற கலக்கங்களும் பறந்தோடும். மேலும் இருதய சம்மந்தமான நோய்கள் நீங்கும். வாழ்வில் கவலையின்றி வாழ்வதற்கு இங்கு சென்று வழிபடுங்கள். உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE செய்யுங்கள்.
News April 5, 2025
நாகை அங்கன்வாடி மையத்தில் 32 காலி பணியிடங்கள்

நாகை மாவட்டத்தில் 20 அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் 12 அங்கன்வாடி உதவியாளர்கள் பணியிடங்கள் காலி பணியிடங்களாக உள்ளன. தகுதியான விண்ணப்பதாரர்கள் வருகிற 7ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை சம்பந்தப்பட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் உரிய சான்றுகளுடன் விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். இந்த தகவலை உடனே வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க…
News April 4, 2025
நாகை: ராஜராஜ சோழனின் புத்த மடாலயம்

நாகையில் பிரிட்டிஷ் ஆட்சியின் போது பழங்கால கட்டடம் ஒன்று இடித்து, மரத்தை வெட்டியதன் விளைவாக, 1930ல் சுமார் 50க்கும் மேற்பட்ட சிலைகள் மற்றும் செப்பேடுகள் கண்டறியப்பட்டன. அதில், கல்வெட்டொன்றில் கி.பி. 1006ல் ராஜராஜ சோழனால் சூடாமனி விஹாரமென்ற இப்புத்த மடாலயம் கட்டப்பட்டது என்பது தெரியவந்தது. பின் இச்சிலைகள் சென்னை மும்பை உட்பட உலகெங்கும் 14 அருங்காட்சியங்களில் பாதுகாக்கப்படுகின்றன.