News May 7, 2025

நாகை: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்

image

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகிற மே.6ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

Similar News

News January 8, 2026

நாகை: போஸ்ட் ஆபீஸில் வேலை!

image

நாகை மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். விருப்பமுள்ளவர்கள் வரும் ஜன.15-க்கு பிறகு<> இங்கு கிளிக் <<>>செய்து, விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

News January 8, 2026

நாகை: சாராயம் கடத்தியவர் அதிரடி கைது

image

நாகூர் – கங்களாஞ்சேரி சாலையில், நாகூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுகொண்டிருந்தனர். அப்போது சின்ன கண்ணமங்களத்தில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த கொட்டாரக்குடியை சேர்ந்த சாய்குமார் (25) என்பவரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர். அதில் விற்பனைக்காக சாராய பாக்கெட்கள் வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்த 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

News January 8, 2026

முன்மாதிரி விருது: நாகை ஆட்சியர் அறிவிப்பு

image

நாகை மாவட்டத்தில் அரசு உதவி பெறாமல் சுயமாக வாழ்க்கையில் முன்னேறிய திருநங்கைகளுக்கு முன்மாதிரி விருது அளிக்கப்பட உள்ளது. இந்த விருதுனை பெற விண்ணப்ப படிவங்களை <>awards.tn.gov.in<<>> என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, உரிய சான்றுகளுடன் வருகிற பிப்.18ஆம் தேதிக்குள் நாகை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும் என ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!