News May 7, 2025
நாகை: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகிற மே.6ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 15, 2025
நாகை: இன்ஜினியர் பணியிடங்கள் அறிவிப்பு

நாகை மக்களே, மத்திய அரசின் மின்சாரத்துறையில் காலியாக உள்ள 1543 இன்ஜினியர் மற்றும் சூப்பர்வைசர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு B.Sc, B.E., B.Tech, M.Tech. ME படித்தோர் விண்ணபிக்கலாம். சம்பளமாக மாதம் ரூ.30,000 முதல் ரூ.1,20,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News September 15, 2025
நாகை: திமுகவில் இணைந்த 2.5 லட்சம் பேர்!

தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக தலைவரும், நாகை மாவட்ட திமுக செயலாளருமான என்.கௌதமன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் நாகை மாவட்டத்தில் மட்டும் இதுவரை ஒரு லட்சம் குடும்பங்களை சேர்ந்த 2 லட்சத்து 56 ஆயிரம் உறுப்பினர்கள் திமுகவில் இணைத்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து உங்கள் கருத்தை கமெண்டில் தெரிவிக்கவும்.
News September 15, 2025
நாகை: 11 ஆண்டுகள் தலைமறைவு; ரவுடி அதிரடி கைது

தெற்கு பொய்கைநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சேப்பான் ராஜேந்திரன் (42). இவர் மீது 2 கொலை வழக்குகள், ஒரு கொலை முயற்சி மற்றும் ஒரு திருட்டு வழக்கு உள்ளிட்ட 4 வழக்குகள் வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளன. வேளாங்கண்ணி அருகே கடந்த 2011-ம் ஆண்டு சத்தியானந்தம் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், 11 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ராஜேந்திரனை நாகை பஸ் நிலையத்தில் போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர்.