News January 1, 2025
நாகை விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

நாகை மாவட்ட தோட்டக்கலைத்துறை சார்பில் பிரதம மந்திரி தண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியத்திலும், பெரிய விவசாயிகளுக்கு 75 சதவிகித மானியத்திலும் கருப்பு நிற தண்ணீர் குழாய்கள் வழங்கப்பட உள்ளன. தகுதியான விவசாயிகள் தங்கள் பகுதி தோட்டக் கலை துறை அலுவலர்களை அணுகி பயன்பெற ஆட்சியர் ஆகாஷ் கேட்டு கொண்டுள்ளார்.
Similar News
News January 8, 2026
நாகை: லைசன்ஸ் எடுக்க இனி அலைய வேண்டாம்!

நாகை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் <
News January 8, 2026
நாகை: பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கல் தொடக்கம்

நாகை மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணிகளை தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழகத் தலைவர் கௌதமன், நாகை எம்எல்ஏ ஷாநவாஸ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். அதன்படி மாவட்டத்தில் 2,19,309 குடும்ப அட்டை பயனாளிகளுக்கு தலா ரூ.3000 ரொக்கம், அரிசி, சீனி, கரும்பு, வேஷ்டி–சேலை அடங்கிய தொகுப்பு வழங்கப்படுகிறது. முதற்கட்டமாக நாகை சிஎஸ்ஐ பள்ளி நியாயவிலைக் கடையில் 711 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
News January 8, 2026
நாகை: 2 நாட்களுக்கு மழை வெளுக்கும்!

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி நாகை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் ஜன.9 (வெள்ளி), ஜன.10 (சனி) ஆகிய 2 தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என ஆரஞ்சு அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


