News April 22, 2025
நாகை: விபத்தில் பலியான 3 வயது சிறுவன்

வேளாங்கண்ணி கீழத்தெருவை சேர்ந்த மாரியப்பன். இவர் விழுந்தமாவடியில் துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு மனைவி மற்றும் மூன்று வயது மகன் ஆகாஷுடன் ஸ்கூட்டியில் வீடு திரும்பிய போது தண்ணீர் பந்தல் அருகே நிலை தடுமாறி சாலையில் விழுந்ததில் 3 வயது சிறுவன் பலியாகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தாய், தந்தை படுகாயத்துடன் ஒரத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Similar News
News January 11, 2026
நாகை அருகே அதிர்ச்சி: 200 கிலோ கஞ்சா பறிமுதல்

வேட்டைக்காரனிருப்பு காவல் நிலையம் அருகே புதுப்பள்ளி பாலம் பகுதியில் போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது இலங்கைக்கு கடத்துவதற்காக காரில் கொண்டுவரப்பட்ட 200 கிலோ கஞ்சாவை போலீசார் வெள்ளிக்கிழமை இரவு அதிரடியாக பறிமுதல் செய்தனா். இதையடுத்து கடத்தலில் ஈடுபட்ட மதுரையை சேர்ந்த மணிகண்டன் என்பவரை கைது செய்த போலீசார், தப்பி ஓடிய ஒருவரை தேடி வருகின்றனர்.
News January 11, 2026
நாகை மாவட்ட கலெக்டர் உத்தரவு

நாகை மாவட்டத்தில் வரும் ஜன.16-ம் தேதி (திருவள்ளுவர் தினம்), ஜன.26-ம் தேதி (குடியரசு தினம்) ஆகிய இரண்டு நாட்களிலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபான கடைகள் மற்றும் கூடங்களை மூட வேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் உத்தரவிட்டுள்ளார். இதனை மீறி அன்றைய தினம் யாராவது மதுபான விற்பனையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆட்சியர் எச்சரித்துள்ளார்.
News January 10, 2026
நாகை: செல்வம் பெருக இந்த கோயில் போங்க!

நாகை அருகே மயிலாடுதுறை, புஞ்சை கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற நற்றுணையப்பர் கோயில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற இக்கோயிலில் உள்ள மூலவரான நற்றுணையப்பரை வழிபட்டால், வாழ்வில் செல்வம் பெருகும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இதை SHARE பண்ணுங்க!


