News January 24, 2025

நாகை: ரேஷன் கார்டு சிறப்பு முகாம்

image

நாகப்பட்டினம் வட்ட வழங்கல் அலுவலகத்தில் குடும்ப அட்டை தொடர்பான சிறப்பு முகாம் நாளை (ஜன.25) நடைபெறவுள்ளது. காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறவுள்ள முகாமில், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், செல்போன் எண் பதிவு செய்தல் உள்ளிட்டவை நடைபெற உள்ளதாகவும், இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என நாகை வட்ட வழங்கல் அலுவலர் ரகு தெரிவித்துள்ளார்.

Similar News

News November 16, 2025

நாகை: மாற்றுதிறனாளிகளுக்கான ஒவிய போட்டிகள்

image

உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு நவ.21 அன்று காலை 10 மணிக்கு நாகை மாவட்ட விளையாட்டு அரங்கில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியருக்கு ஒவியப் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு ரொக்க பரிசுகள் வழங்கபட உள்ளது என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

News November 15, 2025

நாகை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலெர்ட்!

image

வங்கக் கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள காரணத்தால், தமிழத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் நாளை (நவ.16) நாகை, கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களின் ஓரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்யக்கூடும் என ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!

News November 15, 2025

நாகை மாவட்டத்தில் தேவையான உரம் இருப்பு

image

நாகை மாவட்டத்தில் உள்ள 56 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் 76 தனியார் உரக்கடைகளில் தேவையான அளவு உரம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதில் யூரியா 1731 டன், டிஏபி 355 டன், பொட்டாஸ் 279 டன், காம்ப்ளக்ஸ் 692 டன் மற்றும் போதுமான அளவு சூப்பர் பாஸ்பேட் உரம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என மாவட்ட வேளாண் இணை இயக்குனர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!