News April 14, 2025
நாகை: ரேஷன் கடை குறித்து புகார் அளிக்க சிறப்பு எண்!

தமிழகத்தில் பல திட்டங்கள் மக்கள் நன்மைக்காக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதிலொன்றுதான் மக்களுக்கு இலவசம் (ம) குறைந்த விலையில் ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம். ஆனால் சில காரணங்களால் மக்களுக்கு சரிவர பொருட்களை வழங்காமலும், கடையினை திறக்காமலும் ஊழியர்கள் செயல்படுவதாக புகார் எழுகிறது. இதுபோன்ற சம்பவம் உங்கள் பகுதியில் நடைபெறும் பட்சத்தில் 1800 425 5901 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். SHARE பண்ணுங்க.
Similar News
News November 14, 2025
நாகை: இரவு ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

நாகை மாவட்டத்தில் நேற்று (நவ.13) இரவு 10 மணி முதல் இன்று(நவ.14) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
News November 13, 2025
நாகை: நகராட்சி ஆணையர் முக்கிய அறிவிப்பு

நாகூர் ஆண்டவர் தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு, கொடி ஊர்வலம் மற்றும் சந்தனக்கூடு ஊர்வலம் புது பள்ளி தெருவில் தொடங்கி கடைவீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக நாகூர் செல்ல உள்ளது. எனவே ஊர்வலம் செல்லும் பகுதிகளில் உள்ள தற்காலிக பந்தல் விளம்பர தட்டிகள் மற்றும் ஊர்வலத்திற்கு இடையூறாக உள்ள அனைத்து ஆக்ரமிப்புகளையும் சம்பந்தப்பட்டவர்கள் அகற்றுமாறு நாகை நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
News November 13, 2025
நாகை: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <


