News April 23, 2025
நாகை: ரூ.35,000 சம்பளத்தில் வேலை. இதை செய்தால் போதும்..

தேசியத் தலைநகர் பிராந்தியப் போக்குவரத்துக் கழகத்தில் (NCRTC) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் 9 பதவிகளின் கீழ் 72 காலிப்பணிடங்கள் நிரப்பப்பட உள்ளது. டிப்ளமோ, ஐடிஐ & பட்டப்படிப்பு முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ரூ.18,250 முதல் 75,850 வரை சம்பளமாக வழங்கப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்கள் ஏப்.24-க்குள் (நாளை) https://ncrtc.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். SHARE செய்யவும்!
Similar News
News January 10, 2026
நாகை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

இளைய தலைமுறையினரின் உடற்கல்வி மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில், ‘இது நம்ம ஆட்டம் 2026’ போட்டிகள் நாகை மாவட்டத்தில் கோலாகலமாகத் தொடங்க உள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்பும் 16 – 35 வயதுடைய, நாகை மாவட்டத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் www.sdat.tn.gov.in அல்லது www.cmyouthfestival.sdat.in வாயிலாக வரும் ஜன.21-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
News January 10, 2026
நாகையில் இன்று வேலை வாய்ப்பு முகாம்

நாகை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில், நாகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று (ஜன.10) அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 18 முதல் 35 வயதுக்குட்பட்ட ஆண், பெண் என இருபாலரும் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
News January 10, 2026
நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில், நேற்று (ஜன.9) இரவு 10 மணி முதல் இன்று (ஜன.10) காலை 6:00 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!


