News April 30, 2025

நாகை: ரூ.20 லட்சம் அரசு மானியம்

image

நாகை மாவட்டத்தில் கிறித்துவ மகளிர் நலனுக்காக, ஆட்சியர் தலைமையில் கிறித்துவ மகளிர் உதவும் சங்கம் அமைக்கப்பட்டுள்ளது. சங்கம் திரட்டும் நன்கொடை நிதி ஆதாரத்திற்கு ஏற்ப ஒவ்வொரு சங்கத்திற்கும் அதிகபட்சம் ரூ.20.00 லட்சம் வரை அரசால் இணை மானியம் 1:2 என்ற விகிதாச்சாரத்தில் வழங்கப்படுகிறது. இந்நிதியிலிருந்து ஏழ்மையில் உள்ள மகளிருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

Similar News

News October 18, 2025

நாகை: தீபாவளி ஆஃபர் – மக்களே உஷார்!

image

தீபாவளி பண்டிகையானது வரும் அக்.20-ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதற்காக தற்போது பொதுமக்கள் பலரும் ஆன்லைனில் பண்டிகைக்குத் தேவையான பொருட்களை வாங்குகின்றனர். இதனை சைபர் குற்றவாளிகள் தங்களுக்கு சாதமாக பயன்படுத்தி, ஆஃபர் உள்ளதாக போலியான லிங்குகள் மூலமாக பண மோசடியில் ஈடுபடுகின்றனர். எனவே மக்கள் உஷாராக இருக்கும்படியும், ஏமாற்றப்பட்டால் ‘1930’ என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

News October 18, 2025

நாகை: பேனர்கள் வைக்க கூடாது!

image

நாகை மின்வாரிய செயற்பொறியாளர் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கிய இடங்களில் நிற்பதையும், நடப்பதையும் தவிர்க்க வேண்டும். மேலும் மின்னலின் போது டிவி, மிக்ஸி, கம்ப்யூட்டர் போன்ற மின் சாதனங்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மின் கம்பத்தின் அருகில் கயிறு கட்டி துணிகளை உலர்த்தக் கூடாது. அதுபோல மின்கம்பங்களில் விளம்பர பேனர்களை கட்டக்கூடாது என தெரிவித்துள்ளார்.

News October 18, 2025

நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

image

நாகை மாவட்டத்தில் நேற்று (அக்.17) இரவு 10 மணி முதல் இன்று(அக்.18) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. இதனை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!