News May 17, 2024
நாகை: மூன்று நாட்களுக்கு சூறைக்காற்று

நாகப்பட்டினம் மாவட்டத்தில் இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு (மே.17- 20) பலத்த சூறைக்காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 2, 2025
நாகை: பள்ளிகளுக்கு உள்ளுர் விடுமுறை

நாகப்பட்டினம் மெய்கண்ட மூர்த்தி சுவாமி திருக்கோயிலின் மகா கும்பாபிசேகம் நாளை 3ஆம் தேதி நடக்கிறது. இதையடுத்து நாகப்பட்டினம் மற்றும் திருமருகல் ஒன்றியங்களை சேர்ந்த அனைத்து பள்ளிகளுக்கும், நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வரும் 8ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
News November 2, 2025
நாகை: மானியத்துடன் மின்மோட்டார் வேண்டுமா?

நாகை மக்களே, விவசாயிகளுக்கு 50% மானியத்துடன் கூடிய மின்மோட்டார் மற்றும் பம்புசெட்டுகள் பெறுவதற்கு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. புதிதாக வாங்கப்படும் மின் மோட்டார்களின் மொத்த விலையில் ரூ.15,000/-அல்லது 50% மானியமாக வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <
News November 2, 2025
நாகை: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

நாகை மக்களே இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை (9013151515) சேமிக்க வேண்டும். இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக Hi என்று ஆங்கிலத்தில் Message அனுப்பினால் போதும். அதுவே வழிகாட்டும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க…


