News April 14, 2024
நாகை: மீன்பிடித்தடைக்காலம் அமல்

நாகை மாவட்டத்தில் மீன்பிடி தடைக்காலம் இன்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் வரும் ஜூன் மாதம் 14ஆம் தேதி வரை மொத்தம் 61 நாட்களுக்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கடலுக்குச் நாகை அக்கரைப்பேட்டை வேதாரணியம் பகுதியில் கடலுக்குச் சென்ற 80 சதவீத படகுகள் இன்று மாலை வரை கரையை திரும்பி உள்ளதாகவும், மீதமுள்ள படகுகள் இன்று நள்ளிரவுக்குப் கரை திரும்ப மீன்வளத்துறை அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
Similar News
News November 5, 2025
நாகை: தொழில் தொடங்க நிதியுதவி!

நாகை மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் சமூகத்தினா் ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு மற்றும் நவீன சலவையகம் அமைக்க அரசு நிதி உதவி பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பப் படிவத்தை, மாவட்ட ஆட்சியரகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தை (அறை எண்-222) அணுகி பெற்றுக்கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
News November 5, 2025
நாகை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

நாகை கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற நவ.6ம் தேதி காலை 11 மணி அளவில் நாகப்பட்டினம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் நாகை கோட்டத்திற்கு உட்பட்ட விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்று தங்கள் குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
News November 5, 2025
நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில் நேற்று (நவ.4) இரவு 10 மணி முதல் இன்று (நவ.5) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.!


