News August 25, 2024

நாகை மீனவர்களுக்கு சிறை தண்டனை: இலங்கை நீதிமன்றம்

image

நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை பகுதியில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 11 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் விசைப்படகுடன் நேற்று சிறைபிடிக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் பருத்தித்துறை நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் நீதிமன்ற காவல் பெற்று யாழ்பாணம் சிறையில் எதிர்வரும் செப்டம்பர் 6-ஆம் தேதி வரை அடைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.‌

Similar News

News September 15, 2025

நாகை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

திருமருகல் வட்டத்தில் உழவர் சேவை மையங்கள் அமைக்க 25 வயதுக்குட்பட்ட வேளாண் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஆகாஷ் அறிவித்துள்ளார். இந்த சேவை மையம் மூலமாக விவசாயிகளுக்கு தேவையான உரம் மற்றும் இடுபொருட்களை விற்பனை செய்யலாம். சேவை மையம் அமைக்க அரசு சார்பில் பயிற்சி மற்றும் முதலீட்டில் 30% மானியம் வழங்கப்படும். ஆர்வமுள்ளோர் திருமருகல் வேளாண் உதவி இயக்குநரை தொடர்பு கொள்ளலாம்.

News September 15, 2025

நாகை: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

image

நாகை மக்களே, உங்க வீடு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?<> இங்கே க்ளிக்<<>> செய்து, உங்கள் சர்வீஸ் எண், ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண்ணை பதிவிட்டு REGISTER பண்ணுங்க. அதன் பிறகு உங்க வீட்டு ‘கரண்ட் பில்’ தகவல் உங்க போனுக்கே வந்துடும். அதுபோல உங்கள் பகுதியில் திடீரென மின்தடை ஏற்பட்டால் 94987 94987 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இந்த அருமையான தகவலை உங்க நபர்களுக்கு SHARE பண்ணுங்க!

News September 15, 2025

நாகையில் டைடல் பார்க் அமைக்க எதிர்ப்பு

image

நாகை மாவட்டம், செல்லூரில் விவசாயிகள் சாகுபடி செய்து வரும் விளை நிலங்களை கையகப்படுத்தி டைடல் பார்க் (தொழில்நுட்ப பூங்கா) அமைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி, வரும் செப்.30-ம் தேதி, காலை 10 மணியளவில் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக தேவநதி ஓடம்போக்கி விவசாயிகள் சங்க தலைவர் வ.சரபோஜி அறிவித்துள்ளார்.

error: Content is protected !!