News April 7, 2025
நாகை: மீனவர்களின் நெகிழ்ச்சிகர செயல்

நாகை, கோடிக்கரையிலிருந்து மீனவர்கள் மீன்பிடிக்க நேற்று காலை கடலுக்கு சென்றனர். அப்போது கோடிக்கரைக்கு தென்கிழக்கே மீன் பிடித்து விட்டு திரும்பி வரும்போது கடலில் துண்டான மீன்பிடி வலையில் ஆலிவ் ரிட்லி ஆமை அகப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததை கண்டனர். உடனடியாக ஆமை சிக்கொண்டிருந்த வலையை வெட்டி ஆமையை விடுவித்தனர். இந்நிலையில் இதனையறிந்த வனத்துறையினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் மீனவர்களை பாராட்டினர்.
Similar News
News November 28, 2025
நாகை மாவட்டத்தை புரட்டி போட போகும் புயல்..

வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘திட்வா’ புயல் தொடர்ந்து வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருகிறது. இது நாகை மாவட்டத்தை ஒட்டிய கடற்பகுதியை கடந்து செல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நாகை மாவட்டத்தில் இன்றும், நாளையும் (நவ.29) பலத்த சூறைக்காற்றுடன் கூடிய அதிகனமழை கொட்டித் தீர்க்க கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
News November 28, 2025
நாகை: அழகிப் போட்டியில் திருநங்கை சாதனை

நாகூரைச் சேர்ந்த திருநங்கை ரஃபியா, சமீபத்தில் கம்போடியாவில் நடந்த சர்வதேச அழகிப் போட்டியில் உலகளவில் மூன்றாம் இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார். பிலிப்பைன்ஸ், மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து 30 போட்டியாளர்கள் போட்டியிட்ட நிலையில், ரஃபியா மூன்றாமிடம் பிடித்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
News November 28, 2025
நாகை: புயல் அவசர உதவி எண்கள்!

வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘திட்வா’ புயல் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், நாகை உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் உங்கள் பகுதியில் மழை / புயலால் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை மையம் 1070, மாவட்ட பேரிடர் மேலாண்மை மையம் 1077 அழைத்தால் போதும், உடனடியாக உதவி அனுப்பி வைக்கப்படும். ஷேர் பண்ணுங்க!


