News October 25, 2024
நாகை மாவட்ட கலெக்டர் முக்கிய தகவல்

நாகப்பட்டினம் மாவட்டம் ஏ.டி.எம் மகளிர் கல்லூரியில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தேர்வு (நேர்முகத் தேர்வு அல்லாத பணிகள்) (Combined Technical Services Examination (Non – Interview Posts) வரும் 26.10.2024 அன்று நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தகவல் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 25, 2025
நாகை துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு

தென் கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக நாகப்பட்டினம் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கொடி ஏற்றப்பட்டுள்ளது. மேலும் நாகை மாவட்டத்தில் உள்ள 27 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை, கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது.
News October 25, 2025
நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு Silver Skoch விருது!

நாகப்பட்டினம் மாவட்டம், மகளிர் முன்னேற்றம் மற்றும் பாலின சமத்துவத்திற்காக முன்னெடுக்கப்பட்ட சிறந்த முயற்சிகளுக்காக, 2025 செப்டம்பர் 20 அன்று தேசிய அளவில் நாகை மாவட்ட நிர்வாகம் மற்றும் சமூக நல அலுவலகம் இணைந்து சில்வர் ஸ்கோச் விருதை பெற்றுள்ளது. சில்வர் ஸ்கோச் விருதை பெற்று நாகை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்தனர்.
News October 25, 2025
நாகை: 72,736 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்!

நாகை மாவட்டத்தில், 2025 குறுவைப் பருவத்தில் இதுவரை 72,736 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 20 மடங்கு அதிகம். இதுவரை 14,600 விவசாயிகளுக்கு ரூ. 175.99 கோடி தொகை வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளது. இதற்காக 124 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன என மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளார்.


