News October 18, 2025

நாகை மாவட்ட ஆட்சியர் முக்கிய தகவல்

image

நாகை மாவட்டத்தில் செயல்படும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஏற்படும் சிரமங்கள், புகார்கள் உள்ளிட்டவைகள் குறித்து விவசாயிகள் 1800-233-4233 அல்லது 81100 05558 என்ற பேரிடர் கால உதவி மைய எண்களை தொடர்பு கொண்டு தெரிவித்தால், உரிய நடவடிக்கை உடனே எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 10, 2025

நாகை: மாற்றுத் திறனாளிகளுக்கு முக்கிய அறிவிப்பு

image

கீழ்வேளுர் வட்டம் ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் வருகிற 10-ந்தேதி புதன்கிழமை காலை 9 மணி முதல் மதியம் ஒரு மணி வரை நடத்தப்பட உள்ளது. எனவே மாற்றுத்திறனாளிகள் அனைவரும் முகாமில் பங்கேற்று பயன் பெறுமாறு நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்

News December 10, 2025

நாகை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

1995-ம் ஆண்டு முதல் சமூக நீதிக்காக பாடுபட்டவர்களுக்கு தமிழக அரசு ‘தந்தை பெரியார் விருது’ வழங்கி கௌரவித்து வருகிறது. அந்த வகையில், நாகை மாவட்டத்தில் சமூக நீதிக்காக பாடுபட்டவர்கள் தங்களது சுய விவரம், முகவரி மற்றும் சமூக நீதிக்காக பாடுபட்ட விபரங்களை வரும் டிச.18-க்குள் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பித்து விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

News December 10, 2025

நாகை: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

நாகை மாவட்டத்தில், நேற்று (டிச.09) இரவு 10 மணி முதல் இன்று (டிச.10) காலை 6:00 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது .ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!