News April 4, 2025
நாகை மாவட்ட ஆட்சியர் அழைப்பு

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் சொ.ஜோ.அருண் தலைமையில் ஆய்வு கூட்டம் வரும் 11-ந்தேதி அன்று நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் சிறுபான்மையினர் சமுதாயத்தைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார். SHARE NOW!
Similar News
News November 14, 2025
விவசாயிகள் வங்கிக் கணக்கில் ரூ.313 கோடி வரவு வைப்பு

நாகை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம், 03.09.2025 முதல் 13.11.2025 வரை 28,930 விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு, இதுவரை ரூபாய் 313 கோடியே, 55 இலட்சத்து, 14 ஆயிரத்து 412 தொகை அவர்தம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டம் முழுவதும் கொள்முதல் பணிகள் முழு வீச்சு நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
News November 14, 2025
நாகை: வீடு கட்ட ரூ.2.10 லட்சம் உதவி!

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய வேண்டுமா? உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். இதனை ஷேர் பண்ணுங்க
News November 14, 2025
நாகை: SIR புகார்களுக்கு தொலைப்பேசி எண் அறிவிப்பு

நாகை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் தொடர்பான புகார்களை தெரிவிக்க தொலைப்பேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. நாகை – 9095423419 கீழ்வேளுர் – 8270930451 வேதாரண்யம் – 9941666142 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம் என ஆட்சியர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


