News August 24, 2024
நாகை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

டேராடூனில் உள்ள இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரியில் ஜூலை 2025-ஆம் ஆண்டிற்கான 8 ஆம் வகுப்பு சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு பெறப்பட்டுள்ளது. அதன்படி மாணவ, மாணவியர்கள் 01.07.2025 அன்று 11½ முதல் 13 வயதிற்குட்பட்டவராக இருத்தல் வேண்டும். 02.07.2012-க்கு பின்னர் 01.01.2014-க்கு முன்னர் பிறந்திருக்க வேண்டும் என நாகை ஆட்சியர் ஆகாஷ் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்
Similar News
News October 28, 2025
நாகை மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு ஓவிய சவால்!

நாகை மாவட்ட அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 5 நாள் ஓவிய சவால் நடைபெற உள்ளது. இதில் 5 நாள்களுக்கு 5 தலைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. 5வது நாள் சிறப்பு ! உங்கள் ஓவியங்களை வகுப்பறையில் காட்சிபடுத்துமாறும், உங்கள் படைப்புகளை #NagaiInktober என்ற ஹேஷ்டேக்குடன் @NagapattinamCollector பக்கத்தை சமுகவலைதளத்தில் Tag செய்யுமாறு மாவட்ட நிர்வாகம் மூலம் தெரிவித்துள்ளனர்.
News October 28, 2025
நாகை: லாரி மோதி டிரைவர் பரிதாப பலி

வேதாரண்யம் அருகே தலைஞாயிறு திருமாளம் வடக்குத்தெருவை சேர்ந்தவர் பாரதிராஜா (40). கார் டிரைவர். இவர் நேற்று பைக்கில் நாகையில் இருந்து வேதாரண்யம் சென்று கொண்டிருந்தபோது, ரெட்டாலடி அருகே சிமெண்ட் மூட்டைகள் ஏற்றி வந்த லாரி பைக் மீது மோதியது. இதில் பாரதிராஜா பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வேளாண்கண்ணி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News October 28, 2025
நாகையில் இப்படி ஒரு இடமா!

ராமர் இலங்கை நோக்கி செல்வதற்கு முதலில் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை வழியை தேர்ந்தெடுத்ததால் இது ஆதிசேது எனப்படுகிறது. கோடியக்கரையில் ஒரு மணல் திட்டின் மீது ஏறி நின்று பார்க்கையில் இலங்கையின் பின்புற கோட்டை மட்டுமே தெரிந்துள்ளது. பின்புறமாக செல்வது தவறு என எண்ணி ராமேஸ்வரம் வழியாக சென்றதாக கூறப்படுகிறது. அவர் நின்ற இடத்தில் விஜயநகர மன்னர்கள் 1480-ம் ஆண்டு ராமர் பாத கோயிலை கட்டினர். ஷேர் பண்ணுங்க


