News August 24, 2024
நாகை மாவட்டத்தில் 3119 மாணவர்கள் பயன்: ஆட்சியர்

அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு உயர்கல்வியை மேற்கொள்ள மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகையாக தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி நாகை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்ற மாணவர்கள் 3,119 பேர் ‘தமிழ் புதல்வன்’ திட்டத்தில் பயனடைந்து உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 31, 2025
வியக்க வைக்கும் வேளாங்கண்ணி மாதா கோவில் வரலாறு

வேளாங்கண்ணி மாதா கோயில் திருவிழா ஆக.29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் கொடிகம்பத்திற்கு ஒரு தனி வரலாறே உண்டு. பல ஆண்டுகளுக்கு முன்பு கடலில் வீசியப் புயலில் சிக்கிய போர்ச்சுக்கீசியர்களை பத்திரமாக மாதா கரை சேர்த்ததாக கூறப்படுகிறது. அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, அவர்கள் அப்போதிருந்த சிறிய ஆலயத்தை பெரிதாக கட்டி எழுப்பினர். பின் தங்கள் கப்பலின் 75 அடி பாய்மர தூணை ஆலயக் கொடிமரமாக நட்டனர்.
News August 31, 2025
நாகை: மாற்றுத்திறனாளிகள் வங்கி கடன் பெற விண்ண்பிக்கலாம்

நாகப்பட்டினத்தில் கண் பார்க்க இயலாதவர்கள், செவி கேட்க இயலாதவர்கள் மற்றும் கால் ஊனமுற்றவர்கள் போன்ற மாற்றுத்திறனாளிகள் சுய வேலைவாய்ப்பிற்கு வங்கி கடன் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதிகபட்சமாக 75 ஆயிரம் வரை கடன் உதவியும் 1/3 பங்கு மானியமும் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News August 30, 2025
நாகை: வீட்டில் இருந்தபடியே விண்ணப்பிக்கலாம்!

நாகை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் <