News November 29, 2024

நாகை மாவட்டத்தில் 105 வீடுகள் சேதம்

image

நாகப்பட்டினம் அதிகனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. தொடர்மழை காரணமாக நாகை மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாக 105 குடிசை மற்றும் ஓட்டு வீடுகள் பகுதி சேதமும் 2 வீடுகள் முழுமையாகவும் சேதம் அடைந்துள்ளது. 47 கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 11, 2025

CM ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த நாகூர் தர்கா கலிபா

image

நகை மாவட்டம் நாகூர் தர்கா கந்தூரி சந்தனக்கூடு திருவிழாவிற்கு, தமிழ்நாடு அரசு 45 கிலோ சந்தனக்கட்டைகளை கட்டணமின்றி வழங்கியது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு, நாகூர் தர்கா கலீஃபாவும் முதல் அறங்காவலுருமான Dr. கலிபா மஸ்தான் சாஹிப் காதரி நேரில் சந்தித்து நேற்று
(டிச.10) பிரசாதம் வழங்கினார்.

News December 11, 2025

நாகை: கோவிலில் சிலை திருடிய 2 பேர் கைது

image

ஆக்கூா் அருகே அப்புராசபுத்தூா் கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் ஐம்பொன் சிலைகள் மற்றும் பித்தளை பொருள்களை திருடிய இருவா் கைது செய்யப்பட்டனா். இக்கோயிலில் திங்கள்கிழமை இரவு கதவு உடைக்கப்பட்டு ஐம்பொன் அம்மன் சிலை மற்றும் பித்தளை பொருட்கள் திருடப்பட்டது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த ராஜசேகரன் (20), முகமது அலி (19) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

News December 11, 2025

நாகை: B.E படித்தவர்களுக்கு வேலை; தேர்வு இல்லை!

image

எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் உள்ள திட்ட பொறியாளர், டெக்னிக்கல் நிபுணர் உள்ளிட்ட பதவிகளுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 23
3. வயது: 21 – 33
4. சம்பளம்: ரூ.25,000 – ரூ.55.000
5. கல்வித்தகுதி: B.E
6. நேர்காணல் நாள்: 16.12.2025
7. மேலும் தகவலுக்கு <>இங்கே கிளிக் <<>>பண்ணுங்க!
8. மற்றவர்களும் பயன்பெற இதனை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!