News August 3, 2024
நாகை மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் சிவகங்கை, புதுக்கோட்டை, ராம்நாடு, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, காஞ்சி, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், அரியலூர், தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி நாகப்பட்டினம் மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT NOW!
Similar News
News December 19, 2025
நாகை: ஆட்டோ வாங்க ரூ.3 லட்சம் கடன் உதவி

நாகை மக்களே, தமிழக அரசு சார்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மகளிருக்கு மின்சார ஆட்டோ வாங்க கூட்டுறவு வங்கிகள் மூலமாக ரூ.3 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படுகிறது. அதன்படி நடப்பாண்டில் 1,000 பேருக்கு ஆட்டோ வாங்க கடன் வழங்கப்படவுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க வாகன விலை விவர அறிக்கை, வருமானச் சான்று, ஆதார், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களுடன் உங்களுக்கு அருகில் உள்ள கூட்டுறவு வங்கிகளை அணுகலாம்.
News December 19, 2025
நாகை: மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000

நாகை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் பள்ளி தலைமையாசிரியர் வழியாக NMMS திறனறிவு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வீதம் என 4 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க டிச.20 கடைசி நாளாகும். எனவே இதனை மாணவ மாணவிகள் பயன்படுத்தி கொள்ளுமாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.
News December 19, 2025
நாகை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

நாகை மாவட்டத்தில் பசு, எருமை வெள்ளாடு போன்ற கால்நடைகளை எளிதில் தாக்கக் கூடிய கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி முகாம் வரும் 29/12/2025 முதல் 28/01/2026 வரை கிராமங்கள் தோறும் நடைபெற உள்ளது. எனவே கால்நடை வளர்ப்போர் தங்களது கால்நடைகளுக்கு சிறப்பு முகாம்களில் தடுப்பூசி செலுத்தி பயன்பெறுமாறு நாகை மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார்.


