News April 10, 2025
நாகை மாவட்டத்தில் மதுபான கடைகள் மூடல்!

நாகை மாவட்டத்தில் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு இன்று (10.4.2025) ஒரு நாள் மட்டும் தமிழ்நாடு வாணிபக் கழகத்தின் கீழ் செயல்படும் அனைத்து மதுபான கடைகள் மற்றும் மதுபான கூட்டங்கள் மூடப்பட வேண்டும். இன்றைய தினம் யாரும் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. தவறினால் மதுபான விதிமுறைகளின்படி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Similar News
News July 9, 2025
கீழ்வேளூரில் போக்குவரத்து மாற்றம்!

கீழ்வேளூர் ரயில்வே பகுதியில் தண்டவாளங்கள் இடையே பராமரிப்பு பணிகள் இன்று காலை தொடங்கியது. மாலை 5 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறும் என்பதால், கீழ்வேளூரில் இருந்து பட்டமங்கலம், தேவூர், கிள்ளுக்குடி செல்லும் இரு சக்கர வாகனங்கள் வேன் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் கூத்தூர் வழியாக மாற்றுப் பாதையில் செல்ல அறிவுறுத்தபட்டுள்ளது.
News July 9, 2025
நாகை மாவட்டத்தில் கால அவகாசம் நீட்டிப்பு

2016-ஆம் ஆண்டு அக்டோபர் 20-ந் தேதிக்கு முன்னர் அமைக்கப்பட்ட மனை பிரிவுகளில், தனி மனையாக வாங்கிய பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அரசாணையில் உள்ள விதிமுறைகளில் எவ்வித மாற்றமும் இல்லாமல் வரண் முறைப்படுத்த 2026 ஜூன் 30 ந்தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள ஆட்சியர் ஆகாஷ் கேட்டு கொண்டுள்ளார்.
News July 9, 2025
10th படித்தால் காவலர், உதவியாளர் வேலை (1/2)

மத்திய அரசு அலுவலகங்களில் உதவியாளர், காவலர் பணிக்காக ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது. இப்பணிக்கு சம்பளம் ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க ஜூலை 24-ம் தேதி கடைசி ஆகும். உடனே <