News April 10, 2025
நாகை மாவட்டத்தில் மதுபான கடைகள் மூடல்!

நாகை மாவட்டத்தில் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு இன்று (10.4.2025) ஒரு நாள் மட்டும் தமிழ்நாடு வாணிபக் கழகத்தின் கீழ் செயல்படும் அனைத்து மதுபான கடைகள் மற்றும் மதுபான கூட்டங்கள் மூடப்பட வேண்டும். இன்றைய தினம் யாரும் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. தவறினால் மதுபான விதிமுறைகளின்படி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Similar News
News January 10, 2026
நாகை மாவட்டத்திற்கு மிக கனமழை எச்சரிக்கை

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு இன்று வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக நாகை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (ஜன.10) கனமழை முதல் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் கவனத்துடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஷேர் பண்ணுங்க!
News January 10, 2026
நாகை: வெளிநாட்டு வேலைக்கு செல்வோர் கவனத்திற்கு!

நாகை மாவட்ட மக்கள் வெளிநாட்டில் வேலைவாய்ப்புகளை பெற அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்ட்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. வேலை வாங்கி தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபடும் போலி ஏஜெண்ட்களால் ஏமாறாமல் இருக்க, அரசு அங்கீகரித்த ஏஜெண்ட்களை தொடர்பு கொண்டு, பாதுகாப்பான முறையில் வெளிநாடு வேலைவாய்ப்புகளைப் பெறவும். உங்கள் பகுதி ஏஜென்ட்கள் விவரங்களை பெற<
News January 10, 2026
நாகை: டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு

நாகை மாவட்டத்தில் திருவள்ளுவர் தினம் (ஜன.16) மற்றும் குடியரசு தினம் (ஜன.26) ஆகிய இரண்டு நாட்களிலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபான கடைகள் மற்றும் கூடங்களை மூட வேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் உத்தரவிட்டுள்ளார். இதனை மீறி அன்றைய தினம் யாராவது மதுபான விற்பனையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆட்சியர் எச்சரித்துள்ளார்.


