News November 24, 2024
நாகை: போக்சோவில் அரசு பள்ளி ஆசிரியர் கைது

திருக்குவளையை அடுத்த சித்தாய்மூர் அரசு உயர்நிலை பள்ளி சமூகவியல் ஆசிரியர் வீரமணி (50). இவர் அதே பள்ளியில் படிக்கும் 10ம் வகுப்பு மாணவியிடம் செல்போனில் ஆபாசமாக பேசி வந்துள்ளார். இது குறித்து மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் நாகை அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து வீரமணியை கைது செய்து போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Similar News
News December 14, 2025
நாகை: இலவச IRON BOX பெற விண்ணப்பிக்கலாம்

நாகை மாவட்டத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் வகுப்புகளைச் சார்ந்த சலவை தொழிலாளிகள் திரவ பெட்ரோலியத்தால் இயங்கும் பித்தளை தேய்ப்பு பெட்டிகளை (IRON BOX) பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். இதற்கு விண்ணப்பிக்க ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கு கீழ் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
News December 14, 2025
நாகை மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

நாகை மாவட்டத்தில், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் மின்கம்பி உதவியாளர் பணிக்கான தகுதி தேர்வு நிர்வாக காரணங்களால், வரும் டிச.27 மற்றும் 28 ஆகிய தேதிகளில், நாகப்பட்டினம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற உள்ளது. மேலும் இது தொடர்பான விவரங்களுக்கு 04365-250129 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
News December 14, 2025
நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில், டிச.13 இரவு 10 மணி முதல் டிச.14 காலை 6:00 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது .


