News June 25, 2024
நாகை நாடாளுமன்ற உறுப்பினர் பதவி ஏற்பு

திருவாரூர் மாவட்டத்தின் சில பகுதிகளை உள்ளடக்கிய நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சிபிஐ வேட்பாளர் செல்வராஜ் இன்று நாடாளுமன்ற எம்.பி-யாக பதவி ஏற்றுக்கொண்டார். நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில், தற்காலிக மக்களவைத் தலைவர் மஹதாப் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். செல்வராஜ் நாகை மக்களவைத் தொகுதிக்கு முதல்முறையாக எம்.பி-யாக பதிவியேற்றுள்ளார்.
Similar News
News November 14, 2025
திருவாரூர்: ஜெருசலேம் புனித பயணத்திற்கு விண்ணப்பம்

நவம்பர் 1-க்கு பிறகு ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்ட 600 கிறிஸ்துவ பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அதன்படி 550 பேருக்கு ரூ.37,000-மும், கன்னிகாஸ்திரிகளுக்கு ரூ.60,000-மும் வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்கள் பிற்படுத்தப்பட்டோர் & சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க 28.02.2026 கடைசி தேதி என மாவட்ட ஆட்சியரகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
News November 14, 2025
திருவாரூர்: பெண் மீது வன்கொடுமை வழக்குப் பதிவு!

முத்துப்பேட்டை தில்லைவிளாகத்தைச் சேர்ந்த செந்தமிழ் செல்வியின் வீட்டு ஆடு அப்பகுதியைச் சேர்ந்த மலர்கொடி என்பவரின் வயலில் மேய்ந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த மலர்கொடி செந்தமிழ் செல்வியை சாதி பெயரை கூறி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதுகுறித்த புகாரின் அடிப்படியில், வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த முத்துப்பேட்டை போலீசார், மலர்கொடியை தேடி வருகின்றனர்.
News November 14, 2025
திருவாரூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (நவ.13) இரவு 10 மணி முதல் இன்று (நவ.14) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!


