News September 14, 2024
நாகை துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு

வங்கதேசத்தின் கடலோரப் பகுதிகள் மற்றும் மேற்கு வங்கம் வழியாக அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் தொடர்ந்து நகரக்கூடும். மேலும் இது மேற்கு-வடமேற்கு திசையில் வங்கதேச கடற்கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில் தொலைதூரத்தில் புயல் உருவாகியுள்ளது என்பதை குறிக்கும் நாகை, காரைக்கால் உள்ளிட்ட ஒன்பது துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
Similar News
News November 26, 2025
நாகை மாவட்ட ஆட்சியர் தகவல்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் சம்பா சாகுபடிக்கு தேவையான யூரியா மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்கள் வரவழைக்கப்பட்டு, அதில் 486 மெட்ரிக் டன் யூரியா, 800 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
News November 26, 2025
நாகை: இரண்டு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

நாகூர் கந்தூரி விழாவை முன்னிட்டு வரும் 30-ம் தேதி, 2 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சென்னையில் காலை 9.45 மணிக்கு புறப்படும் ரயில் விழுப்புரம், காரைக்கால், நாகை வழியாக வேளாங்கண்ணியை மாலை 5-30 வந்தடையும். இதேபோல முன்பதிவில்லாத மெமோ ரயில் விழுப்புரத்தில் காலை 9.10க்கு புறப்பட்டு மயிலாடுதுறை, காரைக்கால் வழியாக மதியம் 1.05-க்கு நாகை வந்தடையும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
News November 26, 2025
நாகை: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

நாகை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


