News April 7, 2025
நாகை: டிகிரி முடித்தவர்களுக்கு ரூ.5,000

நாகப்பட்டினம் மாவட்டத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் சார்பாக முன்னணி நிறுவனங்களில் மாதம் ரூ.5,000 ஊக்கத்தொகையுடன் கூடிய வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. பிரதம மந்திரி தேசிய இன்டர்ன்ஷிப் திட்டத்தில் பயிற்சிக்கு 8ஆம் வகுப்பு முதல் டிகிரி படித்தவர்கள் பதிவு செய்யும் காலம் ஏப்.15 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதென கலெக்டர் தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு<<-1>> இங்கே க்ளிக்<<>> செய்யவும்.
Similar News
News November 3, 2025
நாகை: பாதுகாப்பு பணிகள் தீவிரம்

நாகையில் இன்று நடைபெறும் தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் 10ஆவது பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநரும் பல்கலைக்கழக வேந்தருமான ஆர். என். ரவி பங்கேற்று 496 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார். விழா இன்று காலை 11 மணிக்கு நாகூரிலுள்ள பல்கலைக்கழக கலையரங்கத்தில் நடைபெறும் விழாவை முன்னிட்டு சுமார் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
News November 3, 2025
நாகை: B.E போதும் வேலை ரெடி!

சிறு, குறு மற்றும் நடுத்தர துறையின் கீழ் தேசிய சிறுதொழில் கழகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.40,000-2,20,000
3. கல்வித் தகுதி: B.E., B. Tech, CA, CMA, MBA
4. வயது வரம்பு: 45 வயது வரை
5.கடைசி தேதி: 16.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
7.இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News November 3, 2025
நாகை: 1,00,162 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்

நாகப்பட்டினம், 117 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கே.எம்.எஸ் 2025-2026 ஆம் ஆண்டு குறுவை பருவத்தில் (03.09.2025) முதல் (01.11.2025) வரை 1,00,162 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதில் நேற்றைய தினம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 3,297 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. மாவட்ட முழுவதும் கொள்முதல் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.


