News April 26, 2025
நாகை டாஸ்மாக் கடைகள் மூடல் – மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மே.1ஆம் தேதி நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக், மதுபானக்கூடங்கள், உரிமம் பெற்ற மதுப்பானக்கூடங்கள், அரசு உரிமம் பெற்ற பார்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்க வேண்டும். மே.1 அன்று யாரும் மது விற்பனை செய்யக்கூடாது, அதையும் மீறி மது விற்பனை செய்யப்பட்டால் மது விற்பனை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News December 6, 2025
நாகை: ஆதார் கார்டு- முக்கிய அப்டேட்!

நாகை மக்களே, ஆதார் கார்டில் மாற்றம் செய்யனுமா? இதற்காக நீங்க ஆதார் மையங்களில் கால் கடுக்க நிக்கிறீங்களா?? வீட்டில் இருந்தே மாத்திக்கும் வழியை மத்திய அரசு வெளியிட்டு இருக்கு. இந்த <
News December 6, 2025
நாகப்பட்டினம் துறைமுகத்தின் பெருமை!

நாகப்பட்டினம் பண்டைய காலம் முதல் துறைமுக நகரமாக விளங்கி வருகிறது. குறிப்பாக நாகை மற்றும் நாகூர் துறைமுகங்கள் குறித்து 16-ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்தே வரலாற்றுக் குறிப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. மேலும் இது இடைக்கால சோழர்கள், போர்ச்சுகீசியர்களின் முக்கிய துறைமுகமாக பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!
News December 6, 2025
நாகை: விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு நிதி உதவி

நாகை மாவட்டம் சின்னதும்பூர் ஊராட்சி அழகிரி தெருவை சேர்ந்த திருமாறன் கட்டிட பணியின் போது கீழே விழுந்து, முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டது. மேலும் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு வந்த செய்தி அறிந்த, கீழையூர் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன், நேரில் சென்று ஜான்சன் நினைவு அறக்கட்டளை சார்பில் ரூ.10,000/- நிதிஉதவி வழங்கினார்.


