News May 27, 2024
நாகை: சாராயம் விற்ற 18 பேர் ஒரே நாளில் கைது!
நாகை நகர டிஎஸ்பி பாலகிருஷ்ணன் தலைமையில் 8 தனிப்படை அமைக்கப்பட்டது.
8 எஸ்ஐ தலைமையில் போலீசார் 3 பேர் கொண்ட குழுவினர் பல்வேறு இடங்களில் மஃப்ட்டியில் மதுவிலக்கு அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
நாகை உட்கோட்டத்திற்கு உட்பட்ட, திட்டச்சேரி, திருமருகல், வலிவலம் திருக்குவளை உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு சாராய கடத்தல் மன்னன்கள் 4 பேர் உட்பட 18 பேரை அதிரடியாக நேற்று(மே 26) கைது செய்தனர்.
Similar News
News November 20, 2024
நாகை மாவட்டத்துக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை
வங்கக்கடலில் உருவாகவுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் நாகை மாவட்டத்தில் இன்று முதல் (நவ.20) அடுத்த 24 மணி நேரத்திற்கு மிக கனமழை முதல் அதிகனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் ‘ரெட் அலெர்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்வதை தவிர்த்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. தகவலை பகிரவும்!
News November 20, 2024
நாகப்பட்டினம் மாவட்டதிற்கு ஆரஞ்சு அலெர்ட்
நாகபட்டினம் மாவட்டத்தில் கடந்த ஒரு சில தினங்களாக கன மழை பெய்து வந்த நிலையில் இன்று (20/11/2024) புதன்கிழமை காலை முதல் நாகையின் பல பகுதியில் பலத்த மழை கொட்டி தீர்த்து வருகிறது. நாகையில் விடாமல் பெய்யும் கானமழையினால் நாகப்பட்டினம் மாவட்டதிற்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நாகையில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
News November 20, 2024
நாகை ஏடிஎஸ்பி, டிஎஸ்பி இடமாற்றம்
நாகப்பட்டினம் கூடுதல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த எஸ்.செல்வகுமார் சென்னை ஊனமஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அகாடமிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதைப்போல், நாகப்பட்டினம் துணை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் கடலூர் மாவட்டம் விருதாச்சலம் துணை கண்காணிப்பாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என காவல்துறை தலைவர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.