News March 25, 2025
நாகை: காய்கறி கடையில் புகையிலை பதுக்கி வைத்திருந்த 5பேர் கைது

தனிப்படை போலீஸார் நாகை நீலா கீழ வீதியில் உள்ள காய் கனி கடையில் நேற்று சோதனை செய்தனர். அப்போது, அங்கு காய்கனி முட்டைகளுக்கு நடுவே தடை செய்யப்பட்ட ரூ 2 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து உரிமையாளர் நாகூரை சேர்ந்த முகமது இப்ராஹிம், முஹம்மது ஜமில், முஹம் முஹம்மது அப்துல் ரஹ்மான், இளையராஜா ஆகிய 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.
Similar News
News April 9, 2025
அட்சயலிங்க சுவாமி திருக்கோவிலில் தேரோட்டம்

கீழ்வேளூர் அட்சயலிங்க சுவாமி திருக்கோவில் பங்குனி பெருவிழாவை நடைபெற்று வருகிறது. இப்பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அஞ்சு வட்டத்தம்மன் திருத்தேரோட்டம் இன்று காலை 7.30 மணிக்கு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் ஏராளமானோர் கலந்துகொள்ள உள்ளநிலையில், அந்த பகுதி முழுவதும் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
News April 8, 2025
பழைய சாதம் நீர் அருந்த ஆட்சியர் வேண்டுகோள்

நாகை மாவட்டத்தில் கோடை வெயில் வழக்கத்தை விட அதிகம் நிலவக்கூடும் என்பதால் பொதுமக்கள் பகல் 12 முதல் மாலை 3 மணி வரை வெளியில் செல்லக் கூடாது. தாகம் எடுக்காவிட்டாலும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். எழுமிச்சை வீட்டில் தயாரித்த நீர் மோர், லஸ்சி, பழைய சாதம் நீர், பழச்சாறுகள் அருந்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார். விழிப்புணர்வு ஏற்படுத்த SHARE செய்யவும்.
News April 8, 2025
தாட்கோ சார்பில் ஆரி எம்ப்ராய்டரி பயிற்சி, ஆட்சியர் அறிவிப்பு

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டு கழகமான தாட்கோ சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு டிப்ளமோ ஆரி எம்ப்ராய்டரி பயிற்சி வழங்கப்பட உள்ளது. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு நாகை மாவட்ட தாட்கோ மேலாளர் அலுவலகத்தை அணுகி பயன் பெறலாம் என ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.