News May 7, 2025
நாகை: உணவு குறித்து புகார் அளிக்க புது செயலி

உணவகம், பேக்கரிகளில் உள்ள தரமற்ற உணவு குறித்து மக்கள் புகார் அளிக்க ‘TN FOOD SAFETY CONSUMER’ எனும் செயலியை அரசு வெளியிட்டுள்ளது. இந்த செயலியின் மூலமாக கலப்படம், தரமற்ற உணவு குறித்து டைப் ஏதும் செய்யமால் மிக எளிதாக நீங்கள் புகார் அளிக்கலாம். புகார் அளித்த 24 முதல் 48 மணி நேரத்தில் உணவு பாதுகாப்பு துறை மூலமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த தகவலை உங்க நண்பர்களுக்கு SHARE செய்யுங்கள்!
Similar News
News October 17, 2025
நாகை: அரசு மருத்துவர் சாலை விபத்தில் பலி

வேதாரண்யம் வட்டம், கருப்பம் புலம் அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வந்தவர் நந்தினி. இவர் இன்று 17ந் தேதி அதிகாலை 2 மணி அளவில் காரைக்கால் அருகே நடந்த ஒரு சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார். மருத்துவர் நந்தினி மரணமடைந்த சம்பவம் வேதாரண்யம் வட்டார பொதுமக்கள் மற்றும் மருத்துவர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
News October 17, 2025
விபத்தில்லா தீபாவளி கொண்டாடிட ஆட்சியர் வேண்டுகோள்!

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ், உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 5 மணி வரையிலும் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் பசுமைப் பட்டாசுகளை பயன்படுத்தவும், அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை தவிர்க்கவும், விபத்தில்லா தீபாவளியைக் கொண்டாட அனைவரின் ஒத்துழைப்பையும் கோரியுள்ளார்.
News October 17, 2025
நாகை மக்களே இதை NOTE பண்ணிக்கோங்க!

மக்களே பருவமழை தொடங்கிய நிலையில் வரும் காலங்களில் மழையில் தாக்கம் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. எனவே உங்கள் பகுதியில் மழையால் ஏற்படும் பாதிப்புகளான, வெள்ளம், மின்தடை மற்றும் அத்தியாவசியத் தேவைகள் குறித்து தகவல் தெரிவிக்க இந்த எண்ணை Save பண்ணிக்கோங்க மாநில உதவி எண் – 1070, மாவட்ட உதவி எண்- 1077, அவசர மருத்துவ உதவி – 104 என்ற எண்கள் மழைக்காலங்களில் தேவைப்படலாம். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.