News September 30, 2025
நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில் நேற்று (செப்.29) இரவு 10 மணி முதல் இன்று(செப்.30) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News December 11, 2025
நாகை: கோவிலில் சிலை திருடிய 2 பேர் கைது

ஆக்கூா் அருகே அப்புராசபுத்தூா் கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் ஐம்பொன் சிலைகள் மற்றும் பித்தளை பொருள்களை திருடிய இருவா் கைது செய்யப்பட்டனா். இக்கோயிலில் திங்கள்கிழமை இரவு கதவு உடைக்கப்பட்டு ஐம்பொன் அம்மன் சிலை மற்றும் பித்தளை பொருட்கள் திருடப்பட்டது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த ராஜசேகரன் (20), முகமது அலி (19) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
News December 11, 2025
நாகை: B.E படித்தவர்களுக்கு வேலை; தேர்வு இல்லை!

எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் உள்ள திட்ட பொறியாளர், டெக்னிக்கல் நிபுணர் உள்ளிட்ட பதவிகளுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 23
3. வயது: 21 – 33
4. சம்பளம்: ரூ.25,000 – ரூ.55.000
5. கல்வித்தகுதி: B.E
6. நேர்காணல் நாள்: 16.12.2025
7. மேலும் தகவலுக்கு <
8. மற்றவர்களும் பயன்பெற இதனை SHARE பண்ணுங்க.
News December 11, 2025
நாகை மீனவர்களுக்கு எச்சரிக்கை

வங்கக் கடலில் உருவாகி நீடிக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடலில் காற்றின் வேகம் 45 முதல் 60 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். இதனால் நாகை மாவட்ட விசைப்படகு மற்றும் பைபர் படகு மீனவர்கள் மீன்பிடிக்கச் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற விசைப்படகு மீனவர்களும் விரைந்து கரைத்திரும்ப வேண்டும் என மீன்வளத்துறை எச்சரித்துள்ளது.


