News April 17, 2025
நாகை: இணையதளத்தின் மூலம் உரிமம் பெறலாம்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் அனைத்து வகை கனிமங்களையும் குவாரியிலிருந்து எடுத்துச் செல்வதற்கு வழங்கப்படும் நடை சீட்டு உரிமம் வழங்கப்படுகிறது. தற்போது இணைய வழி வாயிலாக வழங்கும் நடைமுறை ஏப். 28ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது. எனவே https://mimas.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக குவாரி குத்தகைதாரர்கள் விண்ணப்பித்து நடை சீட்டு உரிமம் பெற்றுக்கொள்ளலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்கள்.
Similar News
News July 8, 2025
எர்ணாகுளம் ரயில்பாதையில் மாற்றம்

காரைக்காலில் இருந்து நாகப்பட்டினம் வழியாக எர்ணாகுளம் செல்லும் விரைவு ரயில் (16187) ரயில் பாதை பராமரிப்பு பணிகள் காரணமாக ஜூலை 9 முதல் 12 வரை மாற்றுப் பாதையில் இயங்கும் அதன்படி இருக்கூர், போத்தனூர் வழியாக இயக்கப்படும் எனவே மேற்கண்ட நாட்களில் எர்ணாகுளம் விரைவு ரயில் கோவை ரயில் நிலையத்தில் நிற்காது என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
News July 8, 2025
நாகை: 10th முடித்தவர்களுக்கு ரயில்வேயில் வேலை!

நாகை மாவட்ட மக்களே, இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள ‘6238’ டெக்னீசியன் காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 10, 12, ஐ.டி.ஐ முடித்தவர்கள் <
News July 8, 2025
நாகையில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

நாகை மாவட்டம், நாகூரில் அமைந்துள்ள நாகநாத சுவாமி கோயிலில் ஆனி மாத பிரமோற்சவ திருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நாளை (ஜூலை.9) நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நாகை வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு நாளை ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக நாகை மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளார். SHARE பண்ணுங்க!