News December 4, 2024
நாகை ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

மாநில வேளாண் வளர்ச்சி திட்டம் 2024-25இன் கீழ் நாகை மாவட்ட விவசாயிகளுக்கு மாற்று பயிராக பயறு வகை, சிறுதானியம் மற்றும் எண்ணெய் வித்து பயிர்கள் சாகுபடி செய்வதற்கு ஏக்கருக்கு ரூ.1200 ஊக்க தொகை வழங்கப்படுகிறது. மேலும் ஜிப்சம், துத்தநாக சல்பேட்டுக்கு ரூ.250 மானியம் வழங்கப்படுகிறது. எனவே பயன்பெற விவசாயிகள் வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகிட ஆட்சியர் கேட்டு கொண்டுள்ளார். ஷேர் செய்யவும்
Similar News
News July 8, 2025
நாகை: 10th முடித்தவர்களுக்கு ரயில்வேயில் வேலை!

நாகை மாவட்ட மக்களே, இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள ‘6238’ டெக்னீசியன் காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 10, 12, ஐ.டி.ஐ முடித்தவர்கள் <
News July 8, 2025
நாகையில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

நாகை மாவட்டம், நாகூரில் அமைந்துள்ள நாகநாத சுவாமி கோயிலில் ஆனி மாத பிரமோற்சவ திருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நாளை (ஜூலை.9) நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நாகை வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு நாளை ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக நாகை மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளார். SHARE பண்ணுங்க!
News July 8, 2025
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்; ஆட்சியர் அறிவிப்பு

நாகை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் வரும் ஜூலை 15ல் தொடங்கப்பட உள்ளது. இதில், ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 14 வரையில் நாகை மாவட்ட நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் 97 முகாம்கள் நடைபெற உள்ளன. இம்முகாமில் 15 துறையைச் சேர்ந்த 46 வகையான சேவைகள் வழங்கப்பட உள்ளன. பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.