News March 26, 2025

நாகை அருகே 1100 ஆண்டு பழமையான கோயில்

image

நாகை அருகே திருநாங்கூரில் அமைந்துள்ளது மதங்கீஸ்வரர் ஆலயம். இது 11 சிவதலங்களில் ஒன்றாகும். இது 1100 ஆண்டுகள் பழமையானது. பேச்சு வராத குழந்தைகளை இங்கு அமரச் செய்து நாக்கில் தேனைத்தடவி மூல மந்திரத்தை எழுத, அவர்கள் பேசத் தொடங்குவதும், திருமணமாகாதவர்கள் அஷ்டமி அன்று மட்டை உரிக்காத தேங்காயை அர்ச்சனை செய்து அதை வீட்டில் வைத்து 11 மாதம் வழிபட்டால் திருமணமாகும் என்பது ஐதீகம். SHARE செய்யவும்

Similar News

News April 7, 2025

நாகையில் ரூ.25,000 ஊதியத்தில் வேலை

image

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் HOME CARE NURSING பணிக்காக 100 இடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் ஆண் பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் <>இங்கே க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE செய்யவும்

News April 7, 2025

நாகை மாவட்டத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

image

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று (ஏப்.7) காலை வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவெடுத்தது. இதன் காரணமாக நாளை (ஏப்.8) நாகப்பட்டினம் மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த தகவலை SHARE செய்யவும்

News April 7, 2025

நாகை: தன்னார்வலர்களை அழைக்கும் ஆட்சியர்

image

நம்ம நாகப்பட்டினம் நம்ம திருவிழா நிகழ்ச்சிகள் நாகப்பட்டினம் புதிய கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை தோறும் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. இதில், உற்சாகமாக நேரலை நிகழ்வுகள் நடைபெற உள்ளன. மாவட்ட நிர்வாகத்துடன் நிகழ்ச்சிகளை இணைந்து நடத்திட தன்னார்வலர்கள் தேவைப்படுகிறார்கள். இதில் ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!