News March 24, 2025
நாகையில் 351 மனுக்களுக்கு உடனடி தீர்வு

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைப்பெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் குறைகள் கேட்டறிந்தார். பின்னர் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 351 மனுக்களை பெற்று உடன் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். தொடர்ந்து ஒரு மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கினார்
Similar News
News October 21, 2025
நாகை: நெடுஞ்சாலைத்துறையில் வேலைவாய்ப்பு!

நாகை நெடுஞ்சாலைத்துறை கோட்ட அலுவலகங்களில் 5 உதவியாளர் பணியிடங்களுக்கு ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்த 8ம் வகுப்பு முடித்த இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பத்தினை வரும் நவம்பர் 17ஆம் தேதிக்குள், கோட்ட பொறியாளர் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு மகாலட்சுமி நகர் நாகப்பட்டினம் என்ற முகவரிக்கு, அனுப்பிடலாம் என நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் தெரிவித்துள்ளார்.
News October 21, 2025
நாகை மாவட்டத்திற்கு இன்று ரெட் அலர்ட்!

தென்மேற்கு வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நாகை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (அக்.21) இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை முதல் அதிகனமழை வரை பெய்யக்கூடும் என ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. SHARE NOW!
News October 21, 2025
நாகை: மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!

வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. மேலும், இதன் காரணமாக ஆழ்கடல் பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், நாகை மாவட்ட மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளம் மற்றும் மீனவர்நலத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!