News August 7, 2024

நாகையில் 3-வது புத்தக திருவிழா

image

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 3-வது புத்தக திருவிழா நடைபெறவுள்ளது. நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய மைதானத்தில் 16.08.2024 முதல் 26.08.2024 வரை நடைபெற உள்ளது. 100க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட உள்ளது , அனுமதி இலவசம், மக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 5, 2025

நாகை: புதிய சேவை இன்று முதல் அமல்!

image

நாகை கோட்டத்திற்குட்பட்ட நாகை, திருவாரூா் மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் ஆதாா் அட்டையை பயன்படுத்தி எந்தவித படிவமும் பூா்த்தி செய்யாமல் உங்களது அஞ்சலக கணக்கில் இருந்து ரூ.5,000 வரை பணம் எடுக்கலாம் என்றும், அதுபோல எவ்வளவு வேண்டுமானாலும் பணம் செலுத்தி கொள்ளலாம் என நாகை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் டி. ஹரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

News November 5, 2025

நாகை: தொழில் தொடங்க நிதியுதவி!

image

நாகை மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் சமூகத்தினா் ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு மற்றும் நவீன சலவையகம் அமைக்க அரசு நிதி உதவி பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பப் படிவத்தை, மாவட்ட ஆட்சியரகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தை (அறை எண்-222) அணுகி பெற்றுக்கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

News November 5, 2025

நாகை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

நாகை கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற நவ.6ம் தேதி காலை 11 மணி அளவில் நாகப்பட்டினம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் நாகை கோட்டத்திற்கு உட்பட்ட விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்று தங்கள் குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!