News May 29, 2024
நாகையில் 10 நாட்கள் இலவச பயிற்சி

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்(மகளிர் திட்டம்) இணைந்து நடத்திய மகளிர் குழு உறுப்பினர்களுக்கான 10 நாள் இலவச பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளது. கீழ்வேளூர் ஒன்றியம், சாட்டியக்குடி கிராம சேவை மைய கட்டிடத்தில் நடந்த வகுப்பினை மகளிர் திட்ட இயக்குநர் முருகேசன் நேற்று தொடங்கி வைத்து அப்பளம், ஊறுகாய் மற்றும் மசாலா பொடி தயாரித்து லாபம் பெறுவது பற்றி விளக்கினார்
Similar News
News April 30, 2025
நாகை: ரூ.20 லட்சம் அரசு மானியம்

நாகை மாவட்டத்தில் கிறித்துவ மகளிர் நலனுக்காக, ஆட்சியர் தலைமையில் கிறித்துவ மகளிர் உதவும் சங்கம் அமைக்கப்பட்டுள்ளது. சங்கம் திரட்டும் நன்கொடை நிதி ஆதாரத்திற்கு ஏற்ப ஒவ்வொரு சங்கத்திற்கும் அதிகபட்சம் ரூ.20.00 லட்சம் வரை அரசால் இணை மானியம் 1:2 என்ற விகிதாச்சாரத்தில் வழங்கப்படுகிறது. இந்நிதியிலிருந்து ஏழ்மையில் உள்ள மகளிருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
News April 29, 2025
நாகை: சிறுபான்மையினருக்கு ஆட்சியர் அறிவிப்பு

நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த சிறுபான்மையினர் மக்கள் (கிறித்துவ. இசுலாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயினர்) ஆகியோருக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் அவர்கள் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ், தெரிவித்துள்ளார். கூடுதல் தகவல்களுக்கு மாவட்ட ஆட்சி அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலகத்தை அணுகலாம் என தெரிவித்துள்ளார்.
News April 29, 2025
நாகை: முக்கிய காவல்துறை அதிகாரிகளின் எண்கள்

நாகை மாவட்ட மக்கள் கட்டாயம் தெரிந்துக்கொள்ள வேண்டிய காவல்துறை அதிகாரிகளின் எண்கள்: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் – 8825882175 மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் – 9488546474 , நாகை டி.எஸ்.பி – 9498163851, வேதாரண்யம் டி.எஸ்.பி – 9498163518, மாவட்ட குற்ற பிரிவு – 9994221234, மாவட்ட மதுவிலக்கு அமாலக்கப் பிரிவு – 9787232400. மறக்காமல் உங்கள் நண்பர்கள் மட்டும் உறவினர்களுக்கும் SHARE செய்யவுங்கள்.