News April 29, 2025
நாகையில் வேலைவாய்ப்பு

நாகை மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் HOME CARE NURSING பணிக்காக 100 இடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் ஆண் பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் நாளைக்குள் (ஏப்.30) இங்கே <
Similar News
News November 9, 2025
நாகை: விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

நாகை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பாதுகாப்பு அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என கடந்த சில நாட்களுக்கு முன் ஆட்சியர் அறிவித்திருந்தார். இந்நிலையில் இதற்கு விண்ணப்பிக்க நாளையே (நவ.10) கடைசி நாளாகும். 42 வயதுக்கு உட்பட்ட நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு அலகில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 9, 2025
நாகை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

நாகை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மன நல மருத்துவமனைகள், போதை மீட்பு சிகிச்சை மறுவாழ்வு மையங்கள் , மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு மையங்கள் ஒரு மாத காலத்திற்குள் தமிழ்நாடு மாநில மனநல ஆணையத்தில் தங்களது விவரங்களை பதிவு செய்து உரிமம் பெற வேண்டும். இதனை மீறி உரிமம் பெறாமல் செயல்படும் மறுவாழ்வு மையங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் ப.ஆகாஷ் எச்சரித்துள்ளார்.
News November 9, 2025
நாகை: இரவு ரோந்து பணி காவலர்கள் விபரம்

நாகை மாவட்டத்தில் நேற்று (நவ.8) இரவு 10 மணி முதல் இன்று (நவ.9) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!


