News April 3, 2025

நாகையில் ரூ.25,000 சம்பளத்தில் வேலை

image

நாகை மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஹோம் நர்ஸ் (Home Nurse) பணிக்கான 100 இடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ரூ.15,000-25,000 ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தகுதியுடையவர்கள் <>இங்கே க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்கள்..

Similar News

News December 31, 2025

நாகை: மக்கள் குறைத்தீர் முகாம் – மனுக்களை பெற்ற எஸ்பி

image

நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைத்தீர் முகாமில், காவல் கண்காணிப்பாளர் சு. செல்வகுமார் பொதுமக்களை நேரில் சந்தித்து 6 மனுக்களை பெற்றார். பெறப்பட்ட மனுக்களுக்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். மேலும், மனுக்களை காலதாமதமின்றி முடிக்க காவல் நிலைய பொறுப்பு அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

News December 31, 2025

நாகை: ரூ.48,000 சம்பளத்தில் பேங்க் வேலை!

image

Bank of Baroda வங்கியின் துணை வங்கியான Nainital Bank Limited-இல் காலியாக உள்ள 185 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: பொதுத்துறை வங்கி
2. பணியிடங்கள்: 185
3. வயது: 21 – 32
4. சம்பளம்: ரூ.48,480 – ரூ.85,920
5. கல்வித்தகுதி: Any Degree
6. கடைசி தேதி: 01.01.2026
7. விண்ணப்பிக்க:<> CLICK HERE<<>>
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் பண்ணுங்க!

News December 31, 2025

நாகை: மனைவி பிரிந்து சென்றதால் தற்கொலை

image

மன்னார்குடியை சேர்ந்தவர் சுதாகரன் (45). இவரது மனைவி ரம்யா. இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக ஏற்பட்ட தகராறில் ரம்யா, அவரது கணவரை விட்டு பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சுதாகரன் தேவூரில் உள்ள ரம்யாவின் சகோதரி வீட்டிற்கு சென்று, தோட்டத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!