News March 26, 2025
நாகையில் மார்ச் 29ஆம் தேதி கிராம சபை கூட்டம்

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, நாகையில் உள்ள 193 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம், வரும் மார்ச் 29 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுகொள்ளப்படுகிறது. மேலும் இந்த கூட்டத்தில் நீரின் தூய்மையை பாதுகாத்தல், நீர் மாசுபாட்டை தடுத்தல், அனைவருக்கும் தண்ணீர் மற்றும் சுகாதாரம் சென்று சேர்ந்திடல், போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Similar News
News November 24, 2025
நாகை மாவட்டத்தில் வெளுத்து வாங்கிய மழை நிலவரம்

நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று காலை முதல் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. அவ்வகையில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை நிலவரம்; நாகை 8.3 செமீ, திருப்பூண்டி 7.6 செமீ, வேளாங்கண்ணி 8.3 செமீ, திருக்குவளை – 9.6 செமீ, தலைஞாயிறு 9.9 செமீ (அதிகபட்சம்),வேதாரண்யம் 6.5 செமீ, கோடியக்கரை 6.0 செமீ.மொத்தமாக மாவட்டத்தில் 56.4 செமீ மழை பதிவாகி உள்ளது.
News November 24, 2025
BREAKING: நாகை மாவட்டத்திற்கு இன்று விடுமுறை

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, வரும் நவ. 26ஆம் தேதி புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் நாகை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வரும் காரணத்தால் நாகை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (நவ.24) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
News November 24, 2025
நாகை கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு

நாகை மாவட்டத்தில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு வருகிற 26ந் தேதி நேர்முக தேர்வு நடைபெற்றவுள்ளது. இத்தேர்வானது மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் அலுவலகத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


