News June 26, 2024
நாகையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதற்க நாகை மாவட் காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ்சிங் தலைமை தாங்கினார். தொடர்ந்து மக்களிடம் அவர்களின் குறைகளை கேட்டறிந்து 15 மனுக்களை பெற்றுக்கொண்டு, இவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
Similar News
News January 11, 2026
நாகை: புதிய ஐடிஐ தொடங்க விண்ணப்பிக்கலாம்

நாகை மாவட்டத்தில் 2026 – 2027ம் ஆண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல், அங்கிகாரம் புதுப்பித்தல், கூடுதல் தொழிற்பிரிவுகள் ஏற்படுத்தல் ஆகியவற்றிற்கு www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் வருகின்ற 28-2-2026க்குள் விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு 04365-250126 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 11, 2026
நாகை அருகே அதிர்ச்சி: 200 கிலோ கஞ்சா பறிமுதல்

வேட்டைக்காரனிருப்பு காவல் நிலையம் அருகே புதுப்பள்ளி பாலம் பகுதியில் போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது இலங்கைக்கு கடத்துவதற்காக காரில் கொண்டுவரப்பட்ட 200 கிலோ கஞ்சாவை போலீசார் வெள்ளிக்கிழமை இரவு அதிரடியாக பறிமுதல் செய்தனா். இதையடுத்து கடத்தலில் ஈடுபட்ட மதுரையை சேர்ந்த மணிகண்டன் என்பவரை கைது செய்த போலீசார், தப்பி ஓடிய ஒருவரை தேடி வருகின்றனர்.
News January 11, 2026
நாகை மாவட்ட கலெக்டர் உத்தரவு

நாகை மாவட்டத்தில் வரும் ஜன.16-ம் தேதி (திருவள்ளுவர் தினம்), ஜன.26-ம் தேதி (குடியரசு தினம்) ஆகிய இரண்டு நாட்களிலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபான கடைகள் மற்றும் கூடங்களை மூட வேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் உத்தரவிட்டுள்ளார். இதனை மீறி அன்றைய தினம் யாராவது மதுபான விற்பனையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆட்சியர் எச்சரித்துள்ளார்.


