News September 14, 2024

நாகையில் பொதுமக்களுக்கான கிரிக்கெட் போட்டி

image

முதலமைச்சர் பரிசு கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் ஒரு பகுதியாக நாளை 15 மற்றும் 16ஆம் தேதிகளில் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுகின்றன. நாகை மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெறும் இந்த போட்டியில் ஆண்கள், பெண்கள் என பொதுமக்கள் அனைவரும் பங்கேற்கலாம். கல்லூரி மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டிகள் வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக் மைதானத்தில் 15ஆம் தேதி நடத்தப்படுகிறது என ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 4, 2025

நாகை: CCTV பழுதுநீக்கும் பயிற்சி அறிவிப்பு

image

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் சார்பில், வேதாரண்யத்தில் மத்திய அரசு மூலம் 13 நாட்கள் இலவச சிசிடிவி பொருத்துதல் மற்றும் பழுதுநீக்கும் பயிற்சி வருகிற 10ந் தேதி முதல் அளிக்கப்பட உள்ளது. 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 45 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான முன்பதிவிற்கு 6374005365 மற்றும் 9047710810 எண்ணில் தொடர்புகொள்ளலாம் என இயக்குனர் தெரிவித்துள்ளார்.

News December 4, 2025

நாகை: பள்ளி மாணவி மாநிலத்தில் முதலிடம்

image

தமிழக அரசு சார்பில் நடைப்பெற்ற தமிழ் திறனறிவு தேர்வில், வேதாரண்யம் வட்டம் தேத்தாக்குடி எஸ்.கே. அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி அ.பிரியா நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று, மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை புரிந்துள்ளார். இவருக்கு பள்ளி பெற்றோர் ஆசிரிய கழக தலைவர் ராமசாமி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

News December 4, 2025

நாகை: SBI வங்கியில் வேலை.. தேர்வு கிடையாது!

image

நாகை மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள், வரும் டிச.23-க்குள்<> இங்கு க்ளிக் <<>>செய்து, இதற்கு விண்ணப்பிக்கலாம். சம்பளமாக மாதம் ரூ.51,000 வழங்கப்படும். இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு கிடையாது. இந்த தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!