News September 4, 2024
நாகையில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி
நாகப்பட்டினம் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் 2024-ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா மற்றும் தந்தை பெரியார் பிறந்தநாளையொட்டி பள்ளி&கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிகள் செப்டம்பர் 10ஆம் தேதி மற்றும் 11ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் நாகையில் உள்ள ஆண்டவர் செவிலியர் கல்லூரியில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் அறிவித்துள்ளார்.
Similar News
News November 21, 2024
பாட புத்தகங்கள் விற்பனைக்கு தயார்
தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் பயன்பெறும் வகையில் சிறந்த வல்லுநர்களை கொண்டு தமிழ் மற்றும் ஆங்கில வழி பாட புத்தகங்கள் அச்சிடப்பட்டு தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வேதாரண்யம் சேது ரஸ்தா சி.க.சு. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் புத்தகங்களை பெற்று பயன் பெற நாகை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை தெரிவித்துள்ளது.
News November 20, 2024
நாகை மாவட்டத்துக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை
வங்கக்கடலில் உருவாகவுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் நாகை மாவட்டத்தில் இன்று முதல் (நவ.20) அடுத்த 24 மணி நேரத்திற்கு மிக கனமழை முதல் அதிகனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் ‘ரெட் அலெர்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்வதை தவிர்த்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. தகவலை பகிரவும்!
News November 20, 2024
நாகப்பட்டினம் மாவட்டதிற்கு ஆரஞ்சு அலெர்ட்
நாகபட்டினம் மாவட்டத்தில் கடந்த ஒரு சில தினங்களாக கன மழை பெய்து வந்த நிலையில் இன்று (20/11/2024) புதன்கிழமை காலை முதல் நாகையின் பல பகுதியில் பலத்த மழை கொட்டி தீர்த்து வருகிறது. நாகையில் விடாமல் பெய்யும் கானமழையினால் நாகப்பட்டினம் மாவட்டதிற்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நாகையில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.