News April 13, 2025
நாகையில் பயிற்சியுடன் கூடிய வேலை

ஐ.ஒ.பி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் DEEE முடித்த நாகை மாவட்ட கிராம புறத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு 30 நாட்கள் தொழில் பழகுநர் பயிற்சி இலவசமாக மத்திய அரசு சான்றுடன் வழங்கப்படுகிறது. மே 5ஆம் தேதி தொடங்க உள்ள பயிற்சியில் பங்குபெற 6374005365 / 8870940443 என்ற ஏதேனும் ஒரு எண்ணில் முன் பதிவு செய்ய பயிற்சி நிறுவன இயக்குனர் நடராஜன் கேட்டு கொண்டுள்ளார்.
Similar News
News November 26, 2025
JUST IN நாகை: மிக கனமழை எச்சரிக்கை!

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காலை புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு ‘சென்யார்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இதன் காரணமாக நாகை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் வரும் நவ.28 & நவ.29 ஆகிய தேதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை முதல் அதிகனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க!
News November 26, 2025
நாகை மாவட்ட ஆட்சியர் தகவல்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் சம்பா சாகுபடிக்கு தேவையான யூரியா மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்கள் வரவழைக்கப்பட்டு, அதில் 486 மெட்ரிக் டன் யூரியா, 800 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
News November 26, 2025
நாகை: இரண்டு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

நாகூர் கந்தூரி விழாவை முன்னிட்டு வரும் 30-ம் தேதி, 2 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சென்னையில் காலை 9.45 மணிக்கு புறப்படும் ரயில் விழுப்புரம், காரைக்கால், நாகை வழியாக வேளாங்கண்ணியை மாலை 5-30 வந்தடையும். இதேபோல முன்பதிவில்லாத மெமோ ரயில் விழுப்புரத்தில் காலை 9.10க்கு புறப்பட்டு மயிலாடுதுறை, காரைக்கால் வழியாக மதியம் 1.05-க்கு நாகை வந்தடையும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.


