News August 2, 2024
நாகையில் தேசிய கொடி பறக்குமா!!!

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் சார்பில் கடந்த ஆண்டு 100 அடி உயரத்தில் கொடிமரம் அமைக்கப்பட்டு முன்னாள் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். இந்த நிலையில் தேசியக்கொடி சேதமடைந்ததால் இறக்கப்பட்டு 3 மாதங்கள் ஆகியும் இதுவரை புதிய தேசியக்கொடி ஏற்றப்படவில்லை. வரும் சுதந்திர தினத்தன்று தேசியக்கொடி பறக்குமா என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
Similar News
News November 16, 2025
நாகை மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை

வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நாகை மாவட்டத்திற்கு நேற்றைய தினம் வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலெர்ட் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் இன்று (நவ.16) காலை நிலவரப்படி நாகை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க!
News November 16, 2025
நாகை மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகிற நவம்பர் 18-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணியளவில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளதாக நாகை மாவட்ட ஆட்சித் தலைவர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார். இக்கூட்டத்தில் நாகை மாவட்ட விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்து பயன்பெறுமாறு ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
News November 16, 2025
நாகை: மாற்றுதிறனாளிகளுக்கான ஒவிய போட்டிகள்

உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு நவ.21 அன்று காலை 10 மணிக்கு நாகை மாவட்ட விளையாட்டு அரங்கில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியருக்கு ஒவியப் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு ரொக்க பரிசுகள் வழங்கபட உள்ளது என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.


