News August 10, 2024
நாகையில் தடுப்பூசி முகாம்

நாகையில் நடைபெறும் புத்தகத் திருவிழாவில் ஆக.17 அன்று செல்ல பிராணிகளுக்கான சிறப்பு கண்காட்சி நடத்தப்பட உள்ளது. இதில் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் வெறிநோய் தடுப்பூசி போடப்படாத நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதனை செல்லப்பிராணி வளர்ப்போர் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் இன்று அறிவுறுத்தியுள்ளார்.
Similar News
News December 18, 2025
நாகை: கூரை வீட்டிற்கு தீ வைத்த நபர்!

திருமருகலை சேர்ந்தவர் செல்வராஜ் (47). இவர் வேலைக்கு சென்ற நிலையில் வாய் பேச முடியாத மகன் வசந்த் மட்டும் இருந்துள்ளார். அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த கீர்த்திவாசன் குடிபோதையில் செல்வராஜ் வீட்டுக்கு தீ வைத்ததாக கூறப்படுகிறது. வசந்த் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து தீயை அணைக்க முயற்சித்த நிலையில் வீடு முழுவதுமாக எரிந்து சேதம் அடைந்தது. இதையடுத்து போலீசார் கீர்த்தி வாசனை கைது செய்தனர்.
News December 18, 2025
நாகை: 10th போதும் அரசு வேலை ரெடி!

மக்களே, பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) மூலம் காலியாக உள்ள 25,487 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: 10th Pass
3. சம்பளம்: ரூ.21,700 – ரூ.69,100
4. வயது வரம்பு: 18-23 (SC/ST–28,OBC–26)
5. கடைசி தேதி : 31.12.2025,
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க <
இத்தகவலை SHARE செய்து மற்றவர்களுக்கும் உதவுங்க.
News December 18, 2025
நாகை: அரிய வகை சிவப்பு மூக்கு ஆளான் பறவை மீட்பு

நாகை புதிய கடற்கரையில் காயமடைந்த பறவை மீட்ட வனத்துறையினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். ரயில்வே கேட் பகுதியில் காயம் அடைந்த அரியவகை பறவையை நாய்கள் பிடிக்க துரத்தியுள்ளது. இதை பார்த்த புதிய கடற்கரை பொறுப்பாளர் தேவராஜ் அந்த பறவை நாய்களிடமிருந்து மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தார். இதை அடுத்து நாகை வனசரக அலுவலர் சியாம் சுந்தர் உத்தரவில் காயமடைந்த பறவைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


