News December 4, 2024
நாகையில் சீன பூண்டுகள் 100 கிலோ பறிமுதல்

நாகப்பட்டினம் கடைவீதியில் இந்திய அரசால் தடைசெய்யப்பட்ட சீன பூண்டுகள் விற்பனை செய்யப்படுகிறதா என்று நாகப்பட்டினம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் புஷ்பராஜ் தலைமையில், நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அன்பழகன், ஆண்டனிபிரபு, பாலகுரு, சீனிவாசன், திலீப், சஞ்சய் ஆகியோர் வணிக நிறுவனங்களில் நேற்று அதிரடி ஆய்வு நடத்தினர். இதில் பத்து கடைகளில் 100 கிலோ சீன பூண்டு பறிமுதல் செய்தனர்.
Similar News
News November 19, 2025
நாகை: சாலையோரம் கிடந்த பிணம்

நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி பேருந்து நிலையம் அருகே சுமார் 70 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் இறந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதையடுத்து தகவலின் பேரில் அங்கு வந்த வேளாங்கண்ணி போலீசார் உடலை கைப்பற்றி ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதைத் தொடர்ந்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News November 19, 2025
நாகை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்

நாகை மாவட்டத்தில் நேற்று(நவ.18) இரவு 10 மணி முதல் இன்று(நவ.19) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் தங்களது புகார்களை இதில் குறிப்பிட்டுள்ள எண்களை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
News November 18, 2025
நாகை: உடலை வயல்வெளியில் தூக்கிச் செல்லும் அவலம்

நாகை மாவட்டம் எரவாஞ்சேரி ஊராட்சி தேவன்குடி மேலத்தெரு பகுதியில், சுமார் 50 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் வசிக்கும் பொது மக்களின் சுடுகாடு வடக்கு புத்தாறு ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. அப்பகுதிக்குச் செல்ல போதிய சாலை வசதி இல்லாத காரணத்தால், இறந்தவரின் உடலை வயல் வெளிகளில் தூக்கிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.


