News April 15, 2025
நாகையில் சத்துணவு பணியிடங்களுக்கு வேலை, ஆட்சியர் அழைப்பு

நாகை மாவட்டத்தில் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள சமையல் உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம் என நாகை ஆட்சியர் பா.ஆகாஷ் தெரிவித்துள்ளார். காலியாக உள்ள 93 சமையல் உதவியாளர் பணியிடங்களில் தொகுப்பூதியத்தில் நேரடி நியமனம் செய்யப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான கல்வித் தகுதி 10ம் வகுப்பில் தேர்ச்சி அல்லது தோல்வி, தமிழ் சரளமாக பேச வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. Share செய்யுங்கள்
Similar News
News December 1, 2025
நாகூர் தர்கா கந்தூரி விழா இன்று!

புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவின் 469-ம் ஆண்டு கந்தூரி விழா இன்று நடைபெற உள்ளது. கடந்த நவ.21-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவின், முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு ஊர்வலம் நேற்று இரவு தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்றது. இதையடுத்து இன்று கந்தூரி விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், நாகை மாவட்ட கல்வி நிறுவனங்கள் மற்றும் மாநில அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
News December 1, 2025
நாகை மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை

வங்கக் கடலில் நிலவிய ‘டிட்வா’ புயல் தற்போது சென்னைக்கு அருகே வலுவிழந்து மையம் கொண்டுள்ளது. இது மேலும் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து செல்லும் என எதிர்பார்க்கப்டுகிறது. இந்நிலையில் நாகை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (டிச.1) காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
News December 1, 2025
நாகப்பட்டினம்: இரவு ரோந்து பணி செல்லும் காவலர்கள் விவரம்

நாகை மாவட்டத்தில், நேற்று (நவ.30) இரவு பத்து மணி முதல் இன்று காலை 6:00 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது .ஷேர் செய்யுங்கள்


